பாகுபலிக்காக தர்மதுரையை தவிக்கவிட்ட தமன்னா

பாகுபலிக்காக தர்மதுரையை தவிக்கவிட்ட தமன்னா


Sasikala| Last Modified வியாழன், 4 ஆகஸ்ட் 2016 (16:45 IST)
பாடல்கள் வெளியீட்டு விழாவை நடத்துவதே, படத்தின் நாயகி கலர்ஃபுல் காஸ்ட்யூமில் வருவார், பத்திரிகையாளர்கள் படம் பிடித்து போடுவார்கள், அப்படியே நாலுவரி படத்துக்கு விளம்பரம் கிடைக்கும் என்பதற்காகத்தான்.

 
 
சீனு ராமசாமியின் தர்மதுரை படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில், அப்படத்தின் நாயகி தமன்னா வருவார் என்று கடைசிவரை நம்பிக் கொண்டிருந்தனர். ஆனால், தமன்னா வரவில்லை.
 
வழக்கமாக இப்படி ஏமாற்றினால் கோபம்வரும். ஆனால், தர்மதுரை படக்குழு முழு சாந்தமாகயிருக்கிறது.
 
பாகுபலி இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார் தமன்னா. அதன் காரணமாகவே தர்மதுரை விழாவில் அவர் கலந்து கொள்ளவில்லையாம். பாகுபலி 2 படப்பிடிப்பு என்றதும், தமன்னா வராமல் இருந்தது நியாயம்தான் என்று கப்சிப் எனவாகியிருக்கிறது தர்மதுரை படக்குழு.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்


இதில் மேலும் படிக்கவும் :