ஐஸ்வர்யா ராய் மீண்டும் நடிக்கும் ‘ஜஸ்பா’ படத்தின் பர்ஸ்ட் லுக்


லெனின் அகத்தியநாடன்| Last Updated: செவ்வாய், 19 மே 2015 (21:50 IST)
ஐஸ்வர்யா ராய் பச்சன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நாயகியாக நடிக்கும் ‘ஜஸ்பா’ படத்தின் பர்ஸ்ட் லுக் புகைப்படம் வெளியடப்பட்டுள்ளது.
 
1997ஆம் ஆண்டு தமிழில் மணிரத்னம் இயக்கிய ‘இருவர்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராய் [41]. இவ்வளவு காலத்திற்குப் பிறகும் பாலிவுட் திரையுலகில் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு என்று தனி இடம் உள்ளது.
 
 
பாலிவுட் நடிகரான அபிஷேக் பச்சனுடனான திருமணத்திற்கு பிறகு சில படங்களில் மட்டுமே நடித்து வந்தார். குறிப்பாக தமிழில் ‘எந்திரன்’, மணிரத்னம் மூன்று மொழிகளில் இயக்கிய ‘ராவணன்’ போன்ற சில படங்களில் மட்டுமே நடித்தார். கடைசியாக இவர், 2010ஆம் ஆண்டு ஹிரித்திக் ரோஷனுடன் ’குஷாரிஷ்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
 

 
அதன் பிறகு எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார். தற்போது சஞ்சய் குப்தா இயக்கத்தில், இர்ஃபான் கான், சப்னா ஆஷ்மி, அனுபம் கேர் ஆகியோருடன் ஐஸ்வர்யா ராய் நடிக்கும் படம் ’ஜஸ்பா’. இந்த அதிரடி ஆக்‌ஷன் படத்தில் ஐஸ்வர்யா முக்கிய வேடம் ஏற்றுள்ளார்.
 
இது தென் கொரிய படமான ‘செவன் டேஸ்’ (Seven Days) என்ற திரைப்படத்தின் தழுவலாகும். அக்டோபர் 9ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :