திங்கள், 16 மார்ச் 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: ஞாயிறு, 11 ஜனவரி 2026 (13:32 IST)

சமூக வலைத்தளத்தில் வைரலாகும் #BJPFearsJanaNayagan ஹேஷ்டாக்.. தவெக தொண்டர்கள் ஆவேசம்..!

jananayagan
சமூக வலைத்தளங்களில் தற்போது #BJPFearsJanaNayagan என்ற ஹேஷ்டாக் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. 183 நிமிடங்கள் ஓடக்கூடிய ஒரு திரைப்படம், பல ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட ஒரு தேசிய கட்சியையே ஆட்டிப்படைக்கிறதா என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது.
 
தவெக தலைவர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்க காலதாமதம் செய்வதும், அதற்கு பின்னால் அரசியல் அழுத்தங்கள் இருப்பதாக கூறப்படுவதும் தொண்டர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. "ஒரு சினிமாவுக்கே இவ்வளவு பயமா?" என்ற கிண்டலான பதிவுகள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.
 
பாஜக போன்ற கட்சிகள் தங்களின் அதிகார பலத்தை பயன்படுத்தி விஜய்யை பணிய வைக்க நினைப்பது எடுபடாது என்று தவெகவினர் வாதிடுகின்றனர். விஜய்யை விலை பேசவோ அல்லது தங்களின் பக்கம் இழுக்கவோ பல்வேறு திரைமறைவு வேலைகள் நடப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால், விஜய் எதற்கும் அஞ்சாதவர் என்பதையும், அவர் மக்கள் பக்கமே நிற்பார் என்பதையும் ரசிகர்கள் திட்டவட்டமாக கூறி வருகின்றனர். 
 
Edited by Siva