வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 12 ஜூலை 2016 (14:17 IST)

மொட்ட ராஜேந்திரனுக்கு ரசிகர் மன்றம் - இது மதுர ரவுசு

மொட்ட ராஜேந்திரனுக்கு ரசிகர் மன்றம் - இது மதுர ரவுசு

சினிமா விஷயத்திலும், போஸ்டர் டிசைனிலும் மதுரையை அடிக்க ஆளில்லை. சன்னி லியோனுக்கு கட் அவுட் வைத்து ஷகிலா சேச்சிக்கு பாலாபிஷேகம் செய்யும் அளவுக்கு தீவிரமான ரசிகர்களை கொண்ட நகரம்.


 


மொட்ட ராஜேந்திரனை மட்டும் விட்டுவைப்பார்களா?
 
பேய் படங்களில் நடித்து காமெடியனாக(?) உயர்ந்து நிற்கிறார் ராஜேந்திரன். நான் கடவுள் படத்தில் இவர்தான் வில்லனாக மிரட்டினார் என்றால் இப்போது யாரும் நம்ப மாட்டார்கள். காமெடியே செய்ய வராமல் காமெடி நடிகனாக இருப்பதெல்லாம் தமிழ்நாட்டில்தான் சாத்தியம். நம் ரசனை அப்படி.
 
ராஜேந்திரன் சும்மா வந்தாலே கெக்கெ பிக்கே என்று சிரிக்கிறார்கள். மதுரக்காராய்ங்களுக்கு இதுவே அதிகம். ராஜேந்திரன் அகில உலக ரசிகர் மன்றத்தை திறந்துவிட்டார்கள்.
 
இப்போதான் படங்கள் கிடைத்து பத்து காசு பார்க்க ஆரம்பித்திருக்கிறார். பாசம் காட்றோம்னு அதில் மண்ணள்ளி போட்டுடாதீங்க மதுர பாய்ஸ்.