ஞாயிறு, 7 டிசம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 7 ஜூலை 2025 (08:13 IST)

வடிவேலு & பஹத் பாசில் நடிக்கும் ‘மாரீசன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

வடிவேலு & பஹத் பாசில் நடிக்கும் ‘மாரீசன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்னன் திரைப்படத்தில் பகத் பாஸில் மற்றும் வடிவேலு இணைந்து நடித்தனர் என்பதும் அந்த படம் மாபெரும் வெற்றி பெற்றதற்கு வடிவேலு பஹத் காம்போவும் ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது.

இதனை அடுத்து மீண்டும் பகத் பாஸில் மற்றும் வடிவேலு இணைந்து மாரீசன் என்ற படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குனர் சுதேஷ் சங்க்கர் என்பவர் இயக்கி வருகிறார். சூப்பர் குட் பிலிம்ஸ் இந்த படத்தைத் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் கடந்த ஆண்டு நடந்து முடிந்த நிலையில் தற்போது பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன.

சமீபத்தில் இந்த படத்தின் டீசர் ஒன்று வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றது. இதையடுத்து தற்போது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 25 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகவுள்ளது.