1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Easy to Blame the Actress: Janhvi Kapoor's Make-up Artist Weighs in on Peddi Row

ஜான்வி கபூரின் ஓவர் கிளாமர் காட்சிகள்.. மன்னிப்பு கேட்ட ‘பெத்தி’ பட இயக்குனர்...

ஜான்வி கபூர்
ராம் சரண் மற்றும் ஜான்வி கபூர் நடிப்பில் வெளியாகி, பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைத்து வரும் 'பெத்தி' திரைப்படம், தற்போது ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. இப்படத்தில் ஜான்வி கபூரின் கதாபாத்திரம் அளவுக்கு அதிகமாக கவர்ச்சியாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக இணையதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.
 
இந்த நிலையில், ஜான்வி கபூரின் மேக்கப் கலைஞரான சவ்லீன் கவுர் மஞ்சந்தா, நடிகைக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். திரைமறைவில் என்ன நடந்தது என்று தெரியாமல் நடிகையை குறை கூறுவது எளிது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். படத்தின் தயாரிப்பு பிந்தைய பணிகளின் போதே, குறிப்பிட்ட சில காட்சிகளை நீக்குமாறு ஜான்வி கபூர் படக்குழுவிடம் பலமுறை கோரிக்கை விடுத்ததாகவும், ஆனால் அவை இறுதி பதிப்பில் சேர்க்கப்பட்டுவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இந்த சர்ச்சை தீவிரமடைந்ததை தொடர்ந்து, படத்தின் இயக்குநர் புச்சி பாபு சனா எக்ஸ் தளத்தில் பொதுமன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மக்களின் கருத்துக்களை தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளதாகவும், விமர்சனத்திற்குள்ளான அந்த குறிப்பிட்ட காட்சிகள் படத்தில் இருந்து மாற்றியமைக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
STR51 ஷூட்டிங் எப்போ?!.. செம அப்டேட் கொடுத்த அர்ச்சனா கல்பாத்தி!..