வெள்ளி, 6 பிப்ரவரி 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 5 பிப்ரவரி 2026 (20:09 IST)

லெஜெண்ட் சரவணாவின் அடுத்த பட இயக்குனர் இவர்தான்!.. அடிப்பொலிதான்!...

leader
தமிழ்நாடு முழுவதும் பல ஊர்களில் கிளைகளை வைத்துள்ள சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் அதிபர் சரவணா. இவரை லெஜெண்ட் சரவணா என அழைக்கிறார்கள். சரவணா ஸ்டோர் தொடர்பான பல விளம்பர படங்களில் இவர் நடித்திருக்கிறார். விளம்பர படங்களில் நடித்து பிரபலமானதால் அடுத்து சினிமாவில் நடிக்கும் ஆசை அவருக்கு ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து இரட்டையர்கள் ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் லெஜெண்ட் என்கிற படத்தில் நடித்தார்.ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.. அதோடு ட்ரோலும் செய்யப்பட்டது. அதன்பின் ஒரு வருடங்கள் காத்திருந்து காக்கிச் சட்டை, கொடி, கருடன் உள்ளிட்ட சில படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் லீடர் என்கிற படத்தில் நடித்திருக்கிறார்.

இந்த திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் நேற்று கிளிம்ப்ஸ் வீடியோவும் வெளியானது.. லெஜென்ட் படத்தை ஒப்பிடும் போது லீடர் படத்தில் சரவணாவின் கெட்டப் நன்றாகவே இருப்பதாக ரசிகர்கள் சொல்கிறார்கள். இந்நிலையில், சரவணாவின் அடுத்த படத்தையும் துரை செந்தில்குமாரே இயக்குவது உறுதியாகியிருக்கிறது. விரைவில் இது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்..