வெள்ளி, 17 ஏப்ரல் 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: புதன், 21 ஜனவரி 2026 (16:46 IST)

உதட்டசைவுக்காக கூறப்படும் 'பனானா பனானா.. மாளவிகா மோகனனின் சர்ச்சை கருத்து..!

உதட்டசைவுக்காக கூறப்படும் 'பனானா பனானா.. மாளவிகா மோகனனின் சர்ச்சை கருத்து..!
தென்னிந்தியத் திரையுலகின் வளர்ந்து வரும் நடிகை மாளவிகா மோகனன், சமீபத்தில் டப்பிங் மற்றும் உதட்டசைவு குறித்து பேசிய கருத்து இணையதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் நடந்த ஊடக கலந்துரையாடலில் பங்கேற்ற மாளவிகா, திரைப்படங்களின் படப்பிடிப்பின் போது எக்ஸ்பிரஷன்களை சரியாக கொண்டுவருவதற்காக தான் கடைப்பிடிக்கும் சில யுக்திகளை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, பாடல்களின் போது சரியான உதட்டசைவுக்காக 'பனானா பனானா' என்று கூறுவது வழக்கம் என அவர் குறிப்பிட்டது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த கருத்தை பார்த்த தென்னிந்திய திரைப்பட ரசிகர்கள், மாளவிகாவின் பேச்சு ஆணவமாக இருப்பதாக கூறி சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். "மாஸ்டர்" போன்ற படங்களில் அவரது நடிப்பை கிண்டல் செய்துள்ள நெட்டிசன்கள், மொழியின் முக்கியத்துவத்தையும், டப்பிங் கலைஞர்களின் உழைப்பையும் அவர் கொச்சைப்படுத்துவதாக குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக, மலையாள பின்னணியை கொண்ட அவர், தென்னிந்தியப் படங்களின் டப்பிங் முறையை ஏளனம் செய்வது முறையல்ல என்பது ரசிகர்களின் வாதமாக உள்ளது.
 
இருப்பினும், மாளவிகாவிற்கு ஆதரவாகவும் ஒரு தரப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர். இது ஒரு தொழில்நுட்ப ரீதியான யுக்தி மட்டுமே என்றும், 'தங்கலான்' படத்தில் அவர் காட்டிய அர்ப்பணிப்பை யாரும் மறந்துவிடக் கூடாது என்றும் அவர்கள் பதிவிட்டு வருகின்றனர். டப்பிங் என்பது தென்னிந்திய பன்மொழி திரைப்படங்களில் ஒரு உயிர்நாடியான விஷயமாக கருதப்படும் நிலையில், மாளவிகாவின் இந்த 'பனானா' கமெண்ட் தற்போதைய ட்ரெண்டிங் சர்ச்சையாக மாறியுள்ளது.
 
Edited by Siva