தொடர்புடைய செய்திகள்
- வேற வழியில்ல!.. இறங்கி வந்த அஜித்!.. ஆனாலும் புரட்யூசர் கிடைக்கலயே!..
- 350 கோடி வசூலை நெருங்கிய கருப்பு.. சூர்யாவுக்கு ஒரு சூப்பர் ஹிட்!.. படக்குழு அறிவிப்பு!..
- நீங்கள் கொடுத்த நம்பிக்கை!.. லவ் யூ சார்!.. கருப்பு ஹீரோவை சந்தித்த ஆர்.ஜே.பாலாஜி!..
- அரசியலுக்கு வர முடியல!.. என்ன வாழவச்ச மக்களுக்கு!.. உள்ள குத்துது கண்ணா!.. லாரன்ஸிடம் சொன்ன ரஜினி!..
- பால்பாண்டி பாரதிராஜா ஆனது எப்படி?.. அவரே சொன்ன பிளாஷ்பேக்!...
டபுள் ஆக்குபன்சி முதல் நாள் வசூல் நிலவரம்
தமிழ் சினிமாவில் அவ்வப்போது லாஜிக் பக்கங்களை மூடிவைத்துவிட்டு, ஹாலிவுட் பாணியில் முற்றிலும் புதிய ஃபேண்டஸி கதைக் களங்கள் வெளியாவதுண்டு. அந்த வரிசையில் இணைந்துள்ள படம்தான் 'டபுள் ஆக்குபன்சி'.
பல வருடங்களாகக் குழந்தை இல்லாத போஸ் வெங்கட் தம்பதிக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. ஆனால், அந்த குழந்தைக்கு ஒரு விசித்திரமான உடலமைப்பு இருக்கிறது.
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை: ஆணாகவும், மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை: பெண்ணாகவும் அந்தப் பிள்ளை மாறுகிறது.
இதன் காரணமாக, அதிர்ச்சியடையும் பெற்றோர்கள் சமுதாயத்திற்குப் பயந்து அந்தப் பிள்ளையை வீட்டிற்குள்ளேயே வளர்க்கிறார்கள். அந்தப் பிள்ளையும் வளர்ந்து வாலிப வயதை எட்டுகிறது. ஒரு துரதிர்ஷ்டவசமான விபத்தில் பெற்றோர்கள் இறந்துவிட, அதுவரை வெளி உலகமே தெரியாமல் வளர்ந்த அந்தப் பிள்ளை, இந்தச் சமுதாயத்தை எப்படி எதிர்கொள்கிறது? அதன் வாழ்க்கையில் நடக்கும் சுவாரசியமான திருப்பங்கள் என்ன? என்பதே இப்படத்தின் மீதிக் கதை.
ஆங்காங்கே சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும், திரையரங்கிற்கு வரும் ரசிகர்களை இந்தப் படம் உவகை கொள்ளச் செய்து, ஜாலியான ஒரு அனுபவத்தைத் தந்துள்ளது.
பெரிய எதிர்பார்ப்புகளோ அல்லது பிரம்மாண்ட விளம்பரங்களோ இல்லாமல், மிகக் குறைந்த பட்ஜெட்டில் வெளியான இந்தப் படம், தியேட்டர்களில் நல்ல தொடக்கத்தைப் பெற்று படக்குழுவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Sacnilk இணையதளத் தரவுகளின்படி, பெரிய அளவில் போட்டிகள் இல்லாத சூழலில், ரிலீசான முதல் நாளில் மொத்தம் 73 காட்சிகள் திரையிடப்பட்டு, இப்படம் ரூ 9 லட்சம் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
சிறு பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்களில் வரவேற்பு கிடைப்பதே குதிரைக்கொம்பாக இருக்கும் தற்போதைய சூழலில், 'டபுள் ஆக்குபன்சி' படத்தின் இந்த முதல் நாள் வசூல், வரும் நாட்களில் வாய்மொழி விளம்பரம் மூலம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
