வெளியில போறப்ப...மாஸ்கை மறக்க வேண்டாம்... சூப்பர் ஸ்டார் அட்வைஸ்

MAKESHBABU
sinoj| Last Updated: வெள்ளி, 22 மே 2020 (22:58 IST)

கொரோனாவை தடுக்க இந்தியாவில் 4 வது கட்ட ஊரடங்கு உத்தரவு வரும் மே மாதம் 31 ஆம் தேதிவரை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாள்தோறும் கொரோனாவுக்கு `பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ்பாபு, விதிகள் தளர்த்தப்பட்டாலும் கூட மக்கள் மாஸ்க் அணிவதை மறக்க கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, நீண்ட நாட்களுக்கு பிறகு நாம் இப்போது தான் வெளியே செல்ல ஆரம்பிக்கிறோம். அதனால் ஒவ்வொருமுறை வெளியே வரும் போது மாஸ்க் அணிவதை மறக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :