வதந்திகளை நம்ப வேண்டாம் - நடிகை கே.ஆர்.விஜயா உருக்கம்

Sasikala| Last Modified வியாழன், 1 செப்டம்பர் 2016 (15:19 IST)
நேற்று  நடிகை கே.ஆர்.விஜயாவின் உடல்நிலை குறித்து திடீரென்று வதந்தி கிளப்பப்பட்டது. அதனால் திரையுலகமும், மீடியாவும் பரபரப்பு அடைந்தன.

 
 
கே.ஆர்.விஜயாவின் கணவர் சென்ற வருடம் மரணமடைந்தார். அதன் பிறகு கே.ஆர்.விஜயா ஆலப்புழவில் வசித்து வருகிறார். முக்கியமான நிகழ்வுக்கு மட்டும் சென்னை வருவார். தன்னை குறித்து வந்த வதந்திக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.
 
ராதிகாவின் மகள் திருமணத்துக்கு சென்னை வரவிருந்ததாகவும், காலில் சுளுக்கு ஏற்பட்டதால் பயணத்தை தவித்ததாகவும், தன்னைப் பற்றி இதற்கு முன்பும் இப்படி வதந்தி கிளம்பியதாகவும் அவர் கூறியுள்ளார். தான் நன்றாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 
 
விரைவில் சென்னை வந்து உங்களை சந்திப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :