1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 19 டிசம்பர் 2015 (14:41 IST)

’பீப்’ பாடல் குறித்து ரஜினியிடம் கேட்க வேண்டியதுதானே - கங்கை அமரன் காட்டம்

சர்ச்சைக்குரிய ’பீப்’ பாடல் குறித்து ரஜினியிடமும், டி.ஆர். இடமும் கேட்க வேண்டியதுதானே என்று இசையமைப்பாளர் கங்கை அமரன் காட்டமாக தெரிவித்துள்ளார்.
 

 
கடந்த வியாழக்கிழமை அன்று, மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
 
அப்போது, தனியார் தொலைக்காட்சி நிருபர் ஒருவர், சிம்பு மற்றும் அனிருத்தின் ’பீப் பாடல் வெளியானது குறித்து கேள்வி எழுப்பினார். இதில், எரிச்சலடைந்த இளையராஜா, ’எந்த நேரத்தில் வந்து என்ன கேள்வி எழுப்புகிறாய். உனக்கு அறிவு இருக்கிறதா?” என்று திட்டினார்.
 
இதற்கு, இளையராஜாவிடம் இந்த மாதிரியான கேள்விகளை எழுப்பலாமா? என்று ஆதரவும், நிருபரை தாக்கியது தவறு என்று பத்திரிக்கையாளர் சங்கம் கண்டனமும் தெரிவித்தது.
 
இந்நிலையில், இது குறித்து இசையமைப்பாளரும், இளையராஜாவின் சகோதரருமான கங்கை அமரன் தனது முகநூல் பக்கத்தில், “இளையராஜா போன்ற இசைப் பெரியோர்களிடம் எதைப்பற்றி கருத்துக்கள் கேட்பது என்ற வரம்பு வேண்டும். அவர் இசையமைத்த பாடல்களையே அவர் கேட்டு நான் பார்த்ததில்லை.
 
இந்த முட்டா பீப் பசங்க போட்ட பாட்ட பத்தி அவர் கிட்ட கேட்டது எனக்கு புடிக்கல. ஏன் ரஜினி சாரோட சொந்தக்காரப் பையன் தானே அனிருத்து? அவரக்கேளுங்க.
 
ஏன் தமிழ் தமிழ்னு உசுர விடராரே அந்த வெங்காயத்தோட அப்பா டி.ஆர். அவங்க அபிப்ராயம் என்னன்னு கேட்டுப் போடுங்க....
 
என் அன்புக்குரிய பத்திரிகை நண்பர்களே! உண்மையாக உயர்ந்தோரை உள்ளம் கொதிக்க வைக்க வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.