அன்பில் மகேஷை கிண்டலடித்து வசனம்... ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு!....
தமிழ் திரையுலகில் பல இயக்குனர்களை அறிமுகம் செய்த தயாரிப்பாளர் ஆர்,பி சவுத்ரியின் மகன் என்கிற அடையாளத்தோடு சினிமாவில் நடிக்க துவங்கியவர் ஜீவா. ராம் படம் மூலம் கவனம் ஈர்த்தார். அதன்பின் இவரின் நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன. குறிப்பாக சிவா மனசுல சக்தி திரைப்படம் இவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது
. ஆனால் அதன்பின் வெளியான பல திரைப்படங்கள் ஜீவாவுக்கு வெற்றிப் படங்களாக அமையவில்லை. அவர் தொடர்ந்து நடித்த பல படங்கள் வெற்றியை தரவில்லை.
அதேநேரம், சமீபத்தில் அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்திருக்கிறது. இந்த படத்திற்கு நல்ல வசூலும் கிடைத்து வருகிறது. விஜய் கரூருக்கு சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி பலரும் உயிரிழந்த போது மருத்துவமனையில் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அழுதுகொண்டே படிச்சு படிச்சு சொன்னேனடா.. கண்டிஷன்ஸ் ஃபாலோ பண்ணுங்க பாலோ பண்ணுங்கன்னு என்று பேசி இருந்தார். அந்த வீடியோவை அதிமுகவினரும், நெட்டிசன்களும் சமூகவலைத்தளங்களில் ட்ரோல் செய்தார்கள்.
இந்நிலையில், இந்த வசனத்தை தலைவர் தம்பி தலைமையில் படத்தில் வரும் காட்சியில் ஜீவா பேசியிருக்கிறார். ஒருபக்கம் படத்தின் புரமோசனுக்காக தியேட்டர்களுக்கு செல்லும் ஜீவா மைக்கை பிடித்து இந்த வசனத்தை பேசி பேசி காட்டி வருகிறார்.. இது திமுகவினருக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஜீவா இப்படி பேசுவதை நிறுத்த வேண்டும்.. இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுகவினர் சமூகவலைத்தளங்களில் பொங்கி வருகிறார்கள்.