வெள்ளி, 5 டிசம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 10 அக்டோபர் 2025 (06:41 IST)

தீபாவளிக்கு ரிலீஸாகும் படங்களின் ரன்னிங் டைம் தகவல்!

தீபாவளிக்கு ரிலீஸாகும் படங்களின் ரன்னிங் டைம் தகவல்!
இந்த ஆண்டு தீபாவளிக்கு உச்ச நடிகர்களின் படங்கள் எதுவும் ரிலீஸாகவில்லை. அதனால் இரண்டாம் கட்ட நடிகர்களின் மூன்று படங்கள் ரிலீஸாகின்றன. மாரி செல்வராஜ்-துருவ் விக்ரம் கூட்டணியின் ‘பைசன்’, ப்ரதீப் ரங்கநாதனின் ‘ட்யூட்’ மற்றும் ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ ஆகிய படங்கள் ரிலீஸாகின்றன.

மூன்று படங்களுமே வெவ்வேறு ஜானர்களில் உருவாகியுள்ளதால் இந்த ஆண்டு தீபாவளி சினிமா ரசிகர்களை ஏமாற்றாது என எதிர்பார்க்கலாம். சமீபகாலமாக படத்தின் வெற்றி தோல்விகளை அதன் ஓடும் நேரம் பெரியளவில் தீர்மானிக்கிறது.

இந்நிலையில் தீபாவளிக்கு ரிலீஸாகும் மூன்று படங்களின் ரன்னிங் டைம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. ட்யூட் படம் 2 மணிநேரம் 19 நிமிடமும், பைசன் திரைப்படம் 2 மணிநேரம் 48 நிமிடமும், டீசல் திரைப்படம் 2 மணிநேரம் 24 நிமிடமும் ஓடும் அளவுக்கு உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.