ஞாயிறு, 15 மார்ச் 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: புதன், 14 ஜனவரி 2026 (12:23 IST)

திவ்யா கணேஷ் தான் டைட்டில் வின்னரா? சமூக வலைத்தளங்களில் பரபரப்பு..!

திவ்யா கணேஷ் தான் டைட்டில் வின்னரா? சமூக வலைத்தளங்களில் பரபரப்பு..!
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 இறுதி நாட்களை நெருங்கியுள்ள நிலையில், சின்னத்திரை நடிகை திவ்யா கணேஷ் பற்றிய விவாதங்கள் சமூக வலைதளங்களில் சூடுபிடித்துள்ளன. 'பாக்கியலட்சுமி' உள்ளிட்ட தொடர்களில் நடித்து புகழ்பெற்ற இவர், தற்போது பிக்பாஸ் வீட்டில் அரோரா சின்க்ளேர், சபரிநாதன் மற்றும் விக்கல்ஸ் விக்ரம் ஆகியோருக்கு இணையாகப் பலமான போட்டியாளராக உருவெடுத்துள்ளார்.
 
திவ்யாவின் தெளிவான சிந்தனை, சக போட்டியாளர்களை அரவணைக்கும் குணம் மற்றும் மேடையில் அவர் பேசும் துணிச்சலான பேச்சுக்கள் அவரது ஆதரவாளர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளன. குறிப்பாக, திவாகரின் அத்துமீறல்களை அவர் மிக உறுதியாகக் கையாண்ட விதம் பாராட்டுகளைப் பெற்றது. 
 
இருப்பினும், விமர்சகர்கள் அவரை ஒரு 'டம்மி குயின்' என்றும், அவரது செல்வாக்கு வெறும் 'பிஆர்' வேலைகளால் கட்டமைக்கப்பட்டது என்றும் சாடுகின்றனர். அவர் 'விக்டிம் கார்டு' விளையாடுவதாகவும் ஒரு தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.
 
இந்நிலையில் திவ்யா கணேஷ் டைட்டில் பட்டத்தை வெல்வாரா அல்லது 2வது இடமாவது பிடிப்பார? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
 
Edited by Siva