வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Updated : செவ்வாய், 22 ஏப்ரல் 2014 (13:56 IST)

தண்ணி போட்டு ஆட்டம் - முருகதாஸுக்கு ஷங்கர் அட்வைஸ்

மான் கராத்தே படத்தில் பப்பில் பெண்களுடன் தண்ணி போட்டு ஆடுவது போன்று முருகதாஸ் பாடல் காட்சியில் நடித்திருந்தார். இந்தக் காட்சி முருகதாஸின் சுற்றமும் நட்பை அதிர்ச்சியடைய வைத்தது.
தயாரிக்கிற, இயக்குற படங்களில் சம்பந்தப்பட்டவர்கள் ஒரேயொரு காட்சியில் வந்து போவது வழக்கமானதுதான். துப்பாக்கி படத்தில் முருகதாஸும், சந்தோஷ்சிவனும் கூகுள் கூகுள் பாடலில் சில நொடிகள் வந்து போவார்கள். சிவ கார்த்திகேயனின் எதிர்நீச்சல் படத்தில் டாஸ்மாக் பாடலில் படத்தின் தயாரிப்பாளரான தனுஷ், இசையமைப்பாளர் அனிருத்துடன் இணைந்து ஆட்டம் போட்டிருப்பார்.
 
அந்த பாதிப்பா தெரியவில்லை. அதேபோன்றதொரு காட்சியில் மான் கராத்தேயில் முருகதாஸை பார்த்ததும் அனைவருக்கும் அதிர்ச்சி. திரையுலகில் எவ்வித சர்ச்சையிலும் சிக்காத ஒழுக்கமான இயக்குனர் என்ற பெயர் முருகதாஸுக்கு உண்டு. அவரின் சின்னபிள்ளைத்தனமான சிரிப்பு உருவாக்கி வைத்திருக்கும் இமேஜுக்கு டேமேஜ் உருவாக்கும் வகையில் முருகதாஸின் மான் கராத்தே காட்சி இருந்ததால் அவரின் நலம் விரும்பிகள் பலரும், இப்படியெல்லாம் நடிக்க வேண்டாம் என்று நேரடியாகவே கேட்டுக் கொண்டனர்.
 
இயக்குனர் ஷங்கரும் போன் செய்து இப்படியான காட்சியில் நடிக்க வேண்டாம் என்று முருகதாஸை கேட்டுக் கொண்டார்.
 
அறிவுரையை வரக்கூடிய படங்களில் முருகதாஸ் கடைபிடிப்பார் என் நம்புவோம்.