1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Director Om raut talked about kalam biopic movie

ரசிகர்கள் ஊக்கம் பெறும் விதமாக ‘கலாம்’ படம் இருக்கும்… இயக்குனர் ஓம் ராவத் நம்பிக்கை!

தனுஷ்
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி சினிமா என பிஸியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் தனுஷ். அவர் நடிப்பில் ‘குபேரா’ மற்றும் ‘இட்லி கடை’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாகவுள்ளன. இதையடுத்து அவர் நடிப்பில் ஐந்துக்கும் மேற்பட்ட படங்கள் உருவாக்கத்தில் உள்ளன.

இந்நிலையில் தனுஷ் அடுத்து அனு விஞ்ஞானியும் முன்னாள் குடியரசுத் தலைவருமான அப்துல் கலாமின் பயோபிக் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் மே மாதம் கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது. இந்த படத்தை ‘ஆதிபுருஷ்’ படத்தை இயக்கிய ஓம் ராவத் இயக்கவுள்ளார். படத்தின் முன்தயாரிப்புப் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.

இந்நிலையில் படம் பற்றி பேசியுள்ள இயக்குனர் ஓம் ராவத் “என்னுடைய இளம் வயதில் எனக்கு உத்வேகம் அளிக்கும் ஒருவராக கலாம் இருந்தார். அவரைப் பற்றி நான் எடுக்கும் படமும் இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் விதமாகதான் இருக்கும். தலைவர்களின் பயோபிக்கில் எதை சொல்கிறோம் என்பதை விட எதைத் தவிர்க்கிறோம் என்பது முக்கியமானது.” எனக் கூறியுள்ளார்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
புற்றுநோய் பாதிப்பு.. 38 வயது பிரபல நடிகை காலமானார்.. ரசிகர்கள் அதிர்ச்சி..!