தொடர்புடைய செய்திகள்
- சம்பளத்தை விட்டு கொடுத்த ஹெச்.வினோத்!.. கறாரா வாங்கிய ஆர்.ஜே.பாலாஜி!..
- ஜனநாயகன் ரிலீஸ் எப்போது?!.. தயாரிப்பாளர் கொடுத்த புது அப்டேட்!...
- ஜனநாயகன் படத்தை கிடப்பில் போட்ட கேவிஎன் நிறுவனம்!. விஜய் ஃபேன்ஸ் பாவம்..
- ஜனநாயகன் டைட்டில் கார்ட்!.. விஜய் எடுத்த அதிரடி முடிவு!.. பாவம் ஃபேன்ஸ்!..
- விரைவில் திரைக்கு வருகிறது ஜனநாயகன் : தயாரிப்பாளர் கொடுத்த மாஸ் அப்டேட்!
ஜனநாயகன் ரிலீஸ்.. உண்மையை சொல்லும் தைரியம் எனக்கு இல்லை.. அப்படியே சொன்னாலும் அதை வெளியிடும் தைரியம் ஊடகங்களுக்கும் இல்லை.. எச் வினோத்
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போய்க்கொண்டே இருப்பது சினிமா வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, படத்திற்கு இன்னும் சென்சார் சான்றிதழ் கிடைக்காதது ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் மத்தியில் பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
இந்த சூழலில், படத்தின் ரிலீஸ் தற்காப்பு குறித்து இயக்குனர் எச். வினோத் பேசியுள்ள கருத்துக்கள் தற்பொழுது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய பரபரப்பை கிளப்பியுள்ளன. செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், "ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தற்பொழுது என்னுடைய கைகளில் இல்லை. படத்தின் பின்னணியில் இருக்கும் சிக்கல்கள் தொடர்பான உண்மைகளை சொல்லும் அளவிற்கு தற்போதைக்கு எனக்கு தைரியம் இல்லை" என்று ஓப்பனாக உடைத்து பேசியுள்ளார்.
மேலும் ஊடகங்களை சாடும் தொனியில் பேசிய வினோத், "அப்படியே எனக்கு தைரியம் இருந்து நான் உண்மைகளை பேசினாலும், அந்த உண்மைகளை தற்பொழுது அப்படியே பொதுவெளியில் வெளியிடும் தைரியம் உங்களுடைய ஊடகங்களுக்கு இருக்காது.
எனவே, படம் எப்பொழுது வருகிறதோ அப்பொழுது அனைவரும் தியேட்டரில் பார்ப்போம்" என்று அதிரடியாக கூறி முடித்தார். அரசியல் மற்றும் சமூக பின்னணி கொண்ட இப்படத்திற்கு நிலவும் சென்சார் நெருக்கடிகளே வினோத்தின் இந்த விரக்திக்கு காரணம் என்று கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
