1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Director H. Vinoth Gives 1 Crore to Help 'Karuppu' Movie Producer; Lokesh Kanagaraj Criticized for Lack of Support

’கருப்பு’ பிரச்சனையில் இருந்தபோது சூர்யாவும் உதவவில்லை.. லோகேஷும் உதவவைல்லை.. ஹெச். வினோத் தான் உதவினார்...

karuppu
நடிகர் சூர்யாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்து, ரூ.340 கோடிக்கும் மேல் வசூலித்து 5-வது வாரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் 'கருப்பு'. இத்திரைப்படம் கடந்த மே 14-ஆம் தேதி வெளியாகவிருந்த நிலையில், தயாரிப்பு நிறுவனம் சந்தித்த கடுமையான கடன் நெருக்கடி காரணமாகத் ரிலீஸ் தள்ளிப்போகும் சூழல் உருவானது. அப்போது சூர்யா சில கோடிகள் மற்றும் உத்தரவாதங்களை வழங்கி பிரச்சினையைத் தீர்க்க முயன்றார்.
 
இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம், கடன்தொகை மிகப்பெரியது என்பதால் சூர்யாவால் முழுமையாகக் கொடுக்க முடியாமல் விலகிக்கொண்டதாக தெரிவித்தார். தயாரிப்பு நிறுவனம் தவித்த அந்த இக்கட்டான நேரத்தில், இயக்குனர் ஹெச். வினோத் தாமாக முன்வந்து ரூ. 1 கோடி தந்து உதவியுள்ளார். வினோத் இயக்கிய 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படத்தை தயாரித்த 'ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்' நிறுவனத்தின் மீதான நன்றியுணர்வால் அவர் இந்த உதவியை செய்துள்ளார்.
 
அதே சமயம், இதே தயாரிப்பு நிறுவனத்தில் 'மாநகரம்', 'கைதி' போன்ற சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து இன்று உச்சத்திற்குச் சென்றுள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எந்த ஒரு உதவியும் செய்யவில்லை என்று சுப்ரமணியம் சாடியுள்ளார். "நம்மை வளர்த்துவிட்டவர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் உடன் நிற்க வேண்டும், அந்த நன்றியை மறக்க கூடாது" என்று அவர் லோகேஷை கடுமையாக விமர்சித்துள்ளார்.

Edited by Siva
அடுத்த கட்டுரையில்
அந்த மனுஷன் மட்டும் அத செய்யலனா!.. விஜய்க்கு நன்றி சொன்ன பாரதிராஜா தம்பி!..