1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. director bharathiraja advice to people

உங்களை நேசிக்க கத்துக்கோங்க!.. உங்களுக்காக வாழுங்க!.. மக்களுக்கு பாரதிராஜா சொன்ன அட்வைஸ்!...

bharathi raja
கோலிவுட்ல தற்போதுள்ள சீனியர் இயக்குனர்களுக்கு தந்தை போல இருப்பவர்தான் பாரதிராஜா. அவர் போட்ட புதிய பாதையில்தான் எல்லா இயக்குனர்களும் பயணித்து வருகிறார்கள். எளியவர்கள் கூட படம் இயக்கி வெற்றி கொடுக்க முடியும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியவர் பாரதிராஜா. அப்படி ஒரு புதிய மாற்றத்தை, எழுச்சியை தமிழ் சினிமாவில் ஏற்படுத்தினார்.
 
தனது திரைப்படங்களில் சாதி எதிர்ப்பு, மத எதிர்ப்பு, காதல், மனிதர்களின் வாழ்க்கை, கோபம், அன்பு, தியாகம், உறவு முறைகளின் முக்கியத்துவம், அரசியல் என பலவற்றையும் பாரதிராஜா பேசியிருக்கிறார். அவரின் ஒவ்வொரு திரைப்படம் மக்களுக்கான ஒவ்வொரு பாடமாக இருக்கிறது. சினிமாவில் மட்டுமல்ல.. நிஜ வாழ்விலும் பாரதிராஜா ஒரு போராளிதான். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட போது திரையுலகை திரட்டி போராட்டம் நடத்தியவர் பாரதிராஜா. தொடர்ந்து சமூக கருத்துக்களையும் பேசி வந்தார்..
 
சில வருடங்களுக்கு முன் அவர் அளித்த பேட்டியில் மக்களுக்காக குறிப்பாக இளைஞர்களுக்கு ஒரு முக்கிய அறிவுரையை சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். நான் காலையில் எழுந்தவுடன் கண்ணாடியில் முகத்தை பார்ப்த்து ‘என்னடா பாரதிராஜா எவ்வளவு அழகா இருக்குடா நீ’ என்று சொல்வேன். என் சிரிப்பு எல்லாமே எனக்கு பிடிக்கும்.. மத்தவங்க பார்வைக்கு நான் கருப்பா இருக்கலாம், அசிங்கமா இருக்கலாம்.. ஆனால் எனக்கு நான் அழகுதான்..

உங்களை ரசிக்க முதலில் நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். உங்களை நீங்கள் நேசிக்க கத்துக்கலானா இந்த உலகத்தில் வேறு யாரும் உங்களை நேசிக்க மாட்டாங்க.. முதல்ல உங்க உடம்பை, உங்க ஆன்மாவை நீங்க கொண்டாடுங்க.. ரசிங்க.. அதுதான் வாழ்க்கையின் உண்மையான ரகசியம்.. மத்தவங்களுக்காக வாழாதீங்க.. உங்களுக்காக வாழுங்க’ என சொல்லியிருக்கிறார் பாரதிராஜா.
அடுத்த கட்டுரையில்
விஜயை வச்சிலாம் படமெடுக்க முடியாது!. அசிங்கப்படுத்தி அனுப்பிய பாரதிராஜா..