ஞாயிறு, 19 ஏப்ரல் 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 23 அக்டோபர் 2025 (08:56 IST)

அரசன் படத்தில் ராஜன் கதாபாத்திரம் இடம்பெறுமா?... இயக்குனர் அமீர் பதில்!

அரசன் படத்தில் ராஜன் கதாபாத்திரம் இடம்பெறுமா?... இயக்குனர் அமீர் பதில்!
சிம்பு மற்றும் வெற்றிமாறன் இணைந்து உருவாக்கவுள்ள ‘அரசன்’படத்தின் முன்னோட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாவதற்கு முதல் நாளே திரையரங்குகளிலும் வெளியாகி ரசிகர்களின் ஆதரவைப் பெற்றது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, வேல் ராஜ் ஒளிப்பதிவை மேற்கொள்ள கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார்.

இந்த முன்னோட்டக் காட்சியிலேயே வட சென்னை உலகத்தில் சொல்லப்படாத ஒரு கதை எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இயக்குனர் வெற்றிமாறனும் சில நேர்காணல்களில் வடசென்னை படத்தின் உலகத்தில் நடக்கும் மற்றொரு கதை எனத் தெரிவித்திருந்தார். இதனால் ரசிகர்கள் இந்த படத்தில் இடம்பெறப் போகும் சர்ப்ரைஸ் காட்சிகளுக்காக ஆவலாகக் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இயக்குனரும் நடிகருமான அமீரிடம் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் ‘அரசன் படத்தில் வடசென்னை படத்தில் அவர் நடித்த ராஜன் கதாபாத்திரம் இடம்பெறுமா?’ என்ற கேள்வி வைக்கப்பட்டது. அதற்கு “அரசன் படத்தில் ராஜன் கதாபாத்திரம் வருமா என்பதை இயக்குனர் வெற்றிமாறன்தான் அறிவிக்கவேண்டும்” எனக் கூறியுள்ளார்.