1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 30 மே 2020 (13:06 IST)

ஆண் குழந்தைக்கு அப்பாவானார் இயக்குனர் விஜய்!

பிரபல தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் இளைய மகன் ஏ.எல்.விஜய், கீரிடம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து ’பொய் சொல்லப் போறோம்’, ‘மதராச பட்டினம்’, ‘தெய்வ திருமகள்’, ‘தலைவா’, ‘சைவம்’, ‘தேவி’, லக்ஷ்மி ஆகிய படங்களை இயக்கி பெரும் பிரபலமடைந்தார்.

இவர் தெய்வ திருமகள் படத்தின் போது அந்த படத்தில் நடித்த அமலா பாலுடன் காதல் வயப்பட்டு 2014 ஆம் திருமணம் செய்துக்கொண்டு, கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரஸ்பர மனதுடன் விவாகரத்து பெற்றனர். அதன் பின்னர் ஏ.எல் விஜய்  ஐஸ்வர்யா (MBBS) என்ற பெண்ணை கடந்த வருடம் 2வதுதிருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில்  இயக்குநர் விஜய் - ஐஸ்வர்யா தம்பதிக்கு இன்று (30/05/2020) அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் நலமாக உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தான் அப்பாவாகியுள்ள இந்த மகிழ்ச்சியான செய்தியை இயக்குனர் விஜய் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கலாம்.