தொடர்புடைய செய்திகள்
- முதல்வர் அறிவிப்புக்கு பின் மாரடைப்பு பயம் அதிகரிப்பு.. மருத்துவ பரிசோதனைக்கு குவியும் பொதுமக்கள்..!
- மீண்டும் ஒரு ரீமேக் படத்தில் நடிக்க துருவ் விக்ரம்மிடம் பேச்சுவார்த்தை!
- சமையல் ஷோவுக்கு எதற்குக் கவர்ச்சி?...எனக்கு வேற வழி தெரியல –ஸ்ரீரெட்டி ஓபன் டாக்!
- சிவகார்த்திகேயனை இயக்குகிறார்களா புஷ்கர்- காயத்ரி?
- கிளாமர் லுக்கில் தமன்னாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட்!
‘கில்’ ரீமேக்கில் துருவ் விக்ரம் இல்லையா?... இயக்குனர் அளித்த பதில்!
நடிகர் விக்ரம்மின் மகனான துருவ் ஆதித்யா வர்மா மற்றும் மகான் ஆகிய இரு படங்களில் நடித்து நல்ல அறிமுகத்தைப் பெற்றார். ஆனால் அந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய ஹிட்டடிக்கவில்லை. தொடர்ந்து படங்களில் நடிக்காமல் துருவ் மிகப்பெரிய இடைவெளியை எடுத்துக் கொண்டார்.
இந்நிலையில் இப்போது அவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் –காளமாடன்” என்ற படத்தில் கபடி வீரராக நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் தீபாவளிக்குப் படம் ரிலீஸாகிறது.
இதையடுத்து துருவ் விக்ரம் மீண்டும் ஒரு ரீமேக் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகின. இந்தியில் ஹிட் அடித்த கில் படத்தைத் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடக்கிறது. அதில் தெலுங்கில் பெல்லகொண்டா சீனிவாச ராவும் தமிழில் துருவ் விக்ரமும் நடிக்கவுள்ளதாக சொல்லப்பட்டது.
ஆனால் அதை இயக்குனர் ரமேஷ் வர்மா மறுத்துள்ளார். அதில் துருவ் விக்ரம்முடன் நான் இணையும் படம் ஒரு காதல் கதை. அடுத்த ஆண்டு அந்த படம் தொடங்கும்” எனத் தெரிவித்துள்ளார். இதனால் கில் ரீமேக்கில் துருவ் விக்ரம் நடிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
