வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 23 ஆகஸ்ட் 2016 (19:50 IST)

தீ விபத்தில் சிக்கிய நடிகர்

கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் தர்மதுரை படத்தில் நடித்த சௌந்தரராஜன் சென்ற கார் தீப்பற்றி எரிந்தது.


 


கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே சுந்தரபாண்டியன், தர்மதுரை திரைப்படங்களில்  நடித்த சௌந்தரராஜன் சென்ற கார் தீப்பிடித்து எரிந்தது.
 
காரில் பயணம் செய்த சௌந்தரராஜன் உள்ளிட்ட 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். கார் முற்றிலும் எரிந்து நாசம் ஆனது. 
 
இதுகுறித்து நாலாட்டின்புதூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.