1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. dhanush wants to do mari 3 movie soon

ஒரு படமும் ஓடல!.. மாரி 3 படத்திற்கு ஸ்கெட்ச் போட்ட தனுஷ்!....

mari3
அசுரன் திரைப்படத்திற்கு பின் தனுசுக்கு ஒரு சூப்பர் ஹிட் இதுவரை அமையவில்லை. அவரும் பல இயக்குனர்களின் படங்களில் நடித்து பார்த்தார். நடிப்புக்கு தீனி போடும் சீரியசான கதாபாத்திரங்களிலும் நடித்தார். ஆனால் எடுபடவில்லை. ராயன் திரைப்படம் 50 கோடி வரை வசூலும், திருச்சிற்றம்பலம் திரைப்படம் 100 கோடி வசூலையும் பெற்றது. இந்த இரண்டு படங்களைத் தவிர அவர் நடிப்பில் வெளியான இட்லி கடை உள்ளிட்ட பல படங்களும் தோல்வி படங்களாக அமைந்தது. அதேபோல் கடைசியாக அவர் நடிப்பில் வெளியான கர படமும் வெற்றிப் படமாக அமையவில்லை..

தற்போது அமரன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஓம் என்கிற படத்தில் தனுஷ் நடித்து முடித்திருக்கிறார். அடுத்து தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில்தான், சில வருடங்களுக்கு சீரியஸான கதைகளில் நடிக்க வேண்டாம்.. கலகலப்பான, ஜாலியான குடும்ப பொழுதுபோக்கு மற்றும் மசாலா ஆக்சன் படங்களில் நடிக்கலாம் என தனுஷ் முடிவெடுத்திருக்கிறாராம். மேலும், அப்படி அவர் நடித்த மாரி, மாரி 2 ஆகிய படங்களின் இயக்குனர் பாலாஜி மோகனை அழைத்து தனுஷே ஒரு வரிக்கதையை சொல்லி இதை டெவலப் செய்யுங்கள் என சொல்லிவிட்டாராம். தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. முழுக்கதையும் தயாராகி தனுசுக்கு திருப்தி ஏற்பட்டதும் மாரி 3 திரைப்படம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
லோகேஷ் நடிச்சிட்டு சுத்திக்கிட்டு இருக்கான்!.. கைதி 2 அப்டேட் கொடுத்த கார்த்தி...