‘தேரே இஷ்க் மெய்ன்’ முதல் நாள் வசூலை அதிகாரப்பூர்வமாக அறிவித்த தனுஷ்!
தமிழ் மொழியில் தனது நடிப்பு திறமையால் இரண்டு தேசிய விருதுகளை வென்ற தனுஷ் பாலிவுட்டிலும் கால்பதித்தார். 2013 ஆம் ஆண்டு ராஞ்சனா படத்தின் மூலம் இந்தியில் அறிமுகம் ஆனார். இந்த படத்தை ஆனந்த் எல் ராய் இயக்கி இருந்தார். அதன் பின்னர் சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்த கூட்டணி அத்ராங்கி ரே படத்தில் இணைந்தது. இதையடுத்து அந்த கூட்டணியின் மூன்றாவது படமாக தேரே இஷ்க் மெய்ன் நேற்று வெளியானது.
இந்த படதின் தமிழ் வெர்ஷனும் தமிழ்நாட்டில் ரிலீஸாகியுள்ளது. ஆனால் படத்துக்குப் பெரிய வரவேற்பு தமிழ் ரசிகர்கள் மத்தியில் கிடைக்கவில்லை. ஆனால் தனுஷின் ராஞ்சனா படத்தை விரும்பிப் பார்த்த இந்தி ரசிகர்களுக்கு இந்த படம் வெகுவாகப் பிடித்துள்ளது. மேலும் படத்தின் க்ளைமேக்ஸில் ராஞ்சனா க்ராஸ் ஓவர் இசையும் இருப்பதால் இந்தி ரசிகர்கள் படத்தைக் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் தேரே இஷ்க் மெய்ன் திரைப்படம் இந்திய அளவில் முதல் நாளில் 15.06 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த வசூல் இந்தி வெர்ஷனுக்கானது மட்டும் என்பது குறிப்பிடத்தகக்து. தமிழ் வெர்ஷனுக்கு பெரியளவில் வரவேற்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.