வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : வியாழன், 27 அக்டோபர் 2016 (15:01 IST)

சௌந்தர்யா இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்கிறார்

கோச்சடையான் படத்தை இயக்கிய சௌந்தர்யாவின் இரண்டாவது படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்கிறார்.
கணவரை பிரிந்து வாழும் சௌந்தர்யா படம் இயக்குவதில் தனது முழுக்கவனத்தையும் செலுத்தி வருகிறார். அவர் இயக்கப் போகும் புதிய படத்துக்கு, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. தாணு இந்தப் படத்தை தயாரிக்கிறார்.
 
இதில் தனுஷ் நாயகனாக நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. தனுஷ் இயக்கிவரும் பவர் பாண்டி படம் முடிந்த பின் அவர் இந்தப் படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.