இந்தி படத்துக்காக மூன்று மடங்கு சம்பளத்தைக் குறைத்துக் கொண்டாரா தனுஷ்?
தமிழ் மொழியில் தனது நடிப்பு திறமையால் இரண்டு தேசிய விருதுகளை வென்ற தனுஷ் பாலிவுட்டிலும் கால்பதித்தார். 2013 ஆம் ஆண்டு ராஞ்சனா படத்தின் மூலம் இந்தியில் அறிமுகம் ஆனார். இந்த படத்தை ஆனந்த் எல் ராய் இயக்கி இருந்தார். அதன் பின்னர் சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்த கூட்டணி அத்ராங்கி ரே படத்தில் இணைந்தது. இதையடுத்து அந்த கூட்டணியின் மூன்றாவது படமாக தேரே இஷ்க் மெய்ன் இன்று ரிலீஸாகியுள்ளது.
இந்த படதின் தமிழ் வெர்ஷனும் தமிழ்நாட்டில் ரிலீஸாகியுள்ளது. ஆனால் படத்துக்குப் பெரிய வரவேற்பு தமிழ் ரசிகர்கள் மத்தியில் கிடைக்கவில்லை. இந்நிலையில் இந்த படத்துக்காக தனுஷ் வாங்கியுள்ள சம்பளம் குறித்தத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்துக்காக தனுஷ் 15 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கிய்ள்ளதாக சொல்லப்படுகிறது. வழக்கமாக அவர் தமிழ்ப் படங்களில் நடிக்க வாங்கும் சம்பளத்தை விட இது மூன்று மடங்கு குறைவு என்று சொல்லப்படுகிறது. அதே போல கதாநாயகியாக நடித்துள்ள க்ரீத்தி சனோன் ஐந்து கோடி ரூபாய் சம்பளமாகப் பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.