1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 22 நவம்பர் 2025 (09:56 IST)

டிசம்பரில் தொடங்கும் தனுஷ்- ராஜ்குமார் பெரியசாமி திரைப்படம்!

டிசம்பரில் தொடங்கும் தனுஷ்- ராஜ்குமார் பெரியசாமி திரைப்படம்!
தனுஷ் ஒரு நடிகராகவும் இயக்குனராகவும் தற்போது மிகவும் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த ஆண்டில் அவர் இயகத்தில் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ மற்றும் ‘இட்லி கடை’ ஆகிய திரைப்படங்கள் ரிலீஸாகியுள்ளன. தற்போது அவரின் இந்தி படமான ‘தேரே இஷ்க் மெய்ன்’ அடுத்த வாரம் ரிலீஸாகவுள்ளது.

தற்போது அவர் போர் தொழில் இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் டிசம்பரில் முடியவுள்ள நிலையில் உடனடியாக அவர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவுள்ளார்.

இந்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் மதுரை அன்பு செல்வன் தயாரிக்கவுள்ளார். படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். அமரன் வெற்றிக்குப் பிறகு ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படம் என்பதால் இந்த படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.