இனி தம்மடிக்கும் காட்சியில் நடிக்க மாட்டேன் - அன்புக்கு அடிபணிந்த தனுஷ்

Mahalakshmi| Last Modified செவ்வாய், 21 ஜூலை 2015 (10:13 IST)
என்னப்பா இந்த இழு இழுக்கிறாரே... மாரி படம் பார்த்துவிட்டு இப்படி கமெண்ட் செய்யாதவர்கள் இல்லை. அந்தளவு காட்சிக்கு காட்சி புகைத்து தள்ளினார் தனுஷ். 
பத்திரிகையாளர் சந்திப்பில் மாரியின் புகைமண்டலம் குறித்து நிருபர்கள் கேட்டனர். உண்மையில் எனக்கு தம்மடிக்கிற, தண்ணியடிக்கிற பழக்கம் கிடையாது. மாரியில் தாதா வேடம். தாதா என்ற கதாபாத்திரம் யதார்த்தமாக இருக்க புகைக்க வேண்டியதாயிற்று என்றார் தனுஷ். 
 
இந்நிலையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், புகைபிடிக்கும் காட்சியில் நடிப்பதை தவிர்த்துவிடுங்கள், உங்கள் மாமனார் ரஜினிகாந்த் இப்போது அது போன்ற காட்சிகளில் நடிப்பதில்லை. மாமனார் என்பவர் தந்தைக்கு நிகரானவர், அவருக்கு மதிப்பளிக்ககும் வகையில் புகைப்பது போன்ற காட்சிகளில் நடிக்காதீர்கள் என சென்டிமெண்டாக ஒரு கடிதம் எழுதினார். 
 
அந்தக் கடிதத்துக்கு பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார் தனுஷ். அதில்,
 
எனக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் கிடையாது. மாரி படத்தில் தாதா கேரக்டருக்காக இயக்குநர் சொன்னதால் சிகரெட் பிடிக்கும் காட்சிகளில் நடித்தேன். இனிமேல் என் படங்களில் சிகரெட் பிடிக்கும் காட்சிகள் இடம்பெறாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புக்குரிய அன்புமணி ராமதாசுக்கும் இந்த அறிக்கை மூலம் உறுதி கூறுகிறேன் என்று தெரிவித்துள்ளார் தனுஷ்.


இதில் மேலும் படிக்கவும் :