வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வெள்ளி, 22 மே 2015 (10:12 IST)

பெர்சிய இயக்குனரின் படத்தில் தனுஷ்

சர்வதேச அளவில் கவனம் பெற்ற பெர்சிய திரைப்பட இயக்குனர், மர்ஜன் சத்ராபி. இவரது பெர்ஸோபோலிஸ், தி வாய்சஸ் திரைப்படங்கள் சர்வதேச பார்வையாளர்களை கவர்ந்தவை. பாராட்டும் விருதும் பெற்றவை.
 
இவர், The Extraordinary Journey of the Fakir Who Got Trapped in an Ikea Wardrobe  என்ற ரோமானிய மொழி நாவலை திரைப்படமாக்கவுள்ளார். இதன் கதை மூன்று கண்டங்கள் தாண்டி பயணிக்கிறது.
 
ஃபகிர் என்ற மோசடிப் பேர்வழி டெல்லியிருந்து பிரான்ஸ் செல்கிறான். அங்கு ஒரு பெர்சிய பெண்ணை காதலிக்கிறான். அந்நேரம், ஆப்பிரிக்க அகதியாக அவன் தவறாக அடையாளப்படுத்தப்பட்டு ஆப்பிரிக்காவுக்கு நாடு கடத்தப்படுகிறான். ஃபகிரின் இந்த பயணத்தை மையமாக வைத்து எழுதப்பட்டதுதான் நாவல். அதனை சத்ராபி திரைப்படமாக்குகிறார்.
 
இந்தப் படத்தில் ஃபகிராக நடிக்க தனுஷை அவர் அணுகியுள்ளார். தனுஷ் இதுவரை தனது சம்மதத்தை கூறவில்லை. எனினும் அவர் இந்த சர்வதேச வாய்ப்பை தவறவிடமாட்டார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.