1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 15 அக்டோபர் 2025 (16:47 IST)

தனுஷ் & ராஜ்குமார் பெரியசாமி இணையும் படத்தின் ஷூட்டிங் எவ்வளவு?

தனுஷ் & ராஜ்குமார் பெரியசாமி இணையும் படத்தின் ஷூட்டிங் எவ்வளவு?
சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவனத் தயாரிப்பில் வெளியான அமரன் திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய கமர்ஷியல் வெற்றியைப் பெற்று 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இந்த வெற்றி ராஜ்குமார் பெரியசாமியைக் கவனிக்க வைக்கும் இயக்குனராக்கியுள்ளது.

இதையடுத்து அவர் தனுஷ் நடிப்பில் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் மதுரை அன்பு செல்வன் தயாரிக்கவுள்ளார். படத்தின் பூஜை நடந்த சில மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் ஷூட்டிங் தொடங்கவில்லை.

இந்த படத்தில் கதாநாயகியாக மீனாட்சி சௌத்ரி நடிக்கப் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் நவம்பர் மாத இறுதியில் தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. மற்ற நடிகர் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.