1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 11 செப்டம்பர் 2025 (15:06 IST)

மீசைய முறுக்கு 2 படத்தில் வில்லனாக நடிக்க அழைத்தார்கள்… மறுத்த காரணம் இதுதான்… தேவா ஓபன் டாக்!

மீசைய முறுக்கு 2 படத்தில் வில்லனாக நடிக்க அழைத்தார்கள்… மறுத்த காரணம் இதுதான்… தேவா ஓபன் டாக்!
தமிழ் சினிமாவில் 80 களின் இறுதியில் அறிமுகம் ஆகி 90 களிலும் 2000 களின் தொடக்கத்திலும் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்தவர் தேவா.  ஆனால் ஒரு கட்டத்தில் அவர் தமிழ் சினிமா சந்தையில் இருந்து வெளியேறினார். இப்போது பல ஆண்டுகளாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த அவர் கச்சேரிகள் மூலமாகக் கம்பேக் கொடுத்து வருகிறார்.

தற்போது அதிக அளவில் கச்சேரிகள் நடத்தி பிஸியாக இருந்து வருகிறார். இதற்கிடையில் அவருக்கு நடிப்பதற்கான வாய்ப்புகளும் குவிந்தவண்ணம் உள்ளன. ஆனால் தேவா நடிப்பில் ஆர்வம் காட்ட மறுத்து வருகிறார். ஏற்கனவே ராயன் படத்தில் வில்லனாக நடிக்க தனுஷ் அழைத்தபோது மறுத்துவிட்டார் தேவா.

இந்நிலையில் தற்போது ஆதி நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகும் மீசைய முறுக்கு 2 படத்தில் தனக்கு வில்லனாக நடித்ததாகவும், அந்த வாய்ப்பையும் நிராகரித்து விட்டதாகவும் தேவா தெரிவித்துள்ளார் தேவா. இதுபற்றி “நான் இப்போது கச்சேரிகளில் பிஸியாக இருக்கிறேன். மேலும் நான் ஒரு தொழில்முறை நடிகனும் இல்லை” எனக் கூறியுள்ளார்.