அடுத்தடுத்த டிராப்புகள்.. தேசிய விருது வாங்கிய வெற்றிமாறனுக்கே இந்த நிலைமையா?
தேசிய விருது பெற்ற இயக்குநரான வெற்றிமாறன், 'விடுதலை' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் ஆன பிறகும் தனது அடுத்த படம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாதது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
'விடுதலை 2'-க்கு பிறகு, நடிகர் சூர்யா நடிக்கும் 'வாடிவாசல்' படத்தை வெற்றிமாறன் இயக்குவார் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால், அப்படத்தின் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டு, தற்போது கிடப்பில் போடப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாயின.
'வாடிவாசல்' படத்திற்கு பிறகு, நடிகர் சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்கப்போவதாக வெற்றிமாறன் அறிவித்தார். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் சில சிக்கல்களால் விலகிவிட்டதாகவும், புதிய தயாரிப்பாளரை தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே பல மாதங்களாக வெற்றிமாறன் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்காத நிலையில், இன்னும் சில மாதங்களுக்கு தாமதம் ஆகலாம் என்று கூறப்படுவது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. வெற்றிமாறன் போன்ற ஒரு திறமையான இயக்குநரின் நிலை ஏன் இப்படி இருக்கிறது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இருப்பினும், சிம்பு நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று சினிமா வட்டாரங்கள் எதிர்பார்த்துள்ளன.
Edited by Siva