தீபிகாவைக் கைவிடும் விளம்பர நிறுவனங்கள் – சாதனையில் இருந்து சோதனை !

Last Modified செவ்வாய், 14 ஜனவரி 2020 (07:24 IST)
ஜே என் யூ வில் நடந்த மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த தீபிகா படுகோன் தனது விளம்பர வாய்ப்புகளை இழந்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் தடியடி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து அங்கு சென்ற பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் மாணவர்களை சந்தித்து அவர்களுக்கு ஆதரவு தெரிவிததார்.

இதனால் மத்திய அரசின் கோபத்திற்கு ஆளானார். இதையடுத்து பாஜக ஆதரவாளர்கள் அவர் நடித்த சப்பாக் திரைப்படத்தினை புறக்கணிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக் உருவாக்கி பரப்பினர்.

இதனால் அந்த திரைப்படம் வட இந்தியாவில் மந்தமான வசூலைப் பெற்றது. அத்துடன் இல்லாமல் தீபிகா படுகோனே நடித்துள்ள விளம்பரங்களை புறக்கணிக்க வேண்டுமென அடுத்ததாக  ஹேஷ்டேக் உருவாக்கி பரப்பினர். இதனால் பயந்த தீபிகாவின் விளம்பர நிறுவனங்கள் சில நாட்களுக்கு அவரது விளம்பரங்களை ஒளிபரப்ப வேண்டாம் என தொலைக்காட்சிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாக சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட இருபது நிறுவனங்களுக்கு அம்பாசிடராக இருக்கும் தீபிகா படுகோன் அடித்த பலவிதம் நடித்த பல விளம்பரங்கள் ஒரே நாளில் 11 மணி நேரம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு சாதனை செய்யப்பட்டு சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் தீபிகா படுகோன் எனக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என தெரிகிறது. மேலும் புதிதாக எந்த விளம்பர நிறுவனமும் அவரை தங்கள் பிராண்ட் தூதராக நியமிக்க அஞ்சுவதாகவும் தெரிகிறது.இதில் மேலும் படிக்கவும் :