ஜனநாயகன் வசூலை தாண்டிய DC!.. தளபதியை தாண்டிய லோகேஷ் கனகராஜ்!...
கைதி, விக்ரம், மாஸ்டர் போன்ற திரைப்படங்களை இயக்கி இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த இயக்குனராக மாறியவர் லோகேஷ் கனகராஜ். சஸ்பென்ஸ் கலந்த அதிரடி ஆக்சன் திரில்லர் படங்கள்தான் இவரின் ஸ்டைல். லோகேஷ் கனகராஜ் கதை சொல்லும் விதம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போனது.
அதேநேரம் இவர் இயக்கிய லியோ மற்றும் கூலி ஆகிய இரண்டு திரைப்படங்களும் கலவையான விமர்சனங்களை பெற்றது. எனவே, ரஜினி, கமல் இருவரையும் வைத்து படம் இயக்கும் வாய்ப்பை லோகேஷ் இழந்தார். ஒருபக்கம் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் டிசி என்கிற திரைப்படத்திலும் அவர் நடிக்க துவங்கினார்.
இந்த திரைப்படம் கடந்த 7ம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று 100 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்து விட்டது. அதைவிட முக்கியமாக கேரளாவில் விஜயின் ஜனநாயகன், சூர்யாவின் கருப்பு மற்றும் பிளாஸ்ட் ஆகிய படங்கள் செய்த வசூலை விட அதிகமாக DC திரைப்படம் வசூல் செய்திருக்கிறதாம்.
இந்த படத்தை கேரளாவில் வாங்கி வெளியிட்ட விநியோகத்திற்கு ரூ. 5 கோடி வரை லாபம் கிடைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. வழக்கமாக கேரளாவில் விஜய் படங்கள் அதிக வசூலை பெறும். ஆனால் ஜனநாயகனை விட டிசி படம் அதிக வசூலை பெற்றிருப்பது பேசுபொருளாக மாறியிருக்கிறது.