தொடர்புடைய செய்திகள்
- பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு.. நாளை மறு கூட்டள் ரிசல்ட்.. கூடுதல் விவரங்களுக்கான தொலைபேசி எண்...
- ஒரு பெருமைமிகு சாதனை.. ஒரு மோசமான சாதனை.. வைபவ் சூர்ய வன்ஷியின் அறிமுக போட்டியில் நடந்தது என்ன?
- முருகனின் 6வது படை வீடு பழமுதிர்ச்சோலையில் கும்பாபிஷேகம்.. அமைச்சர் உள்பட பலர் பங்கேற்பு..
- தவெக ஆட்சியை கவிழ்த்தே தீருவோம்.. சீனியர் திமுக பேச்சை கேட்காமல் தன்னிச்சையாக செயல்படுகிறதா ஜூனியர் டீம்?
- குட்கா வழக்கு!. 12 வாரம்தான் டைம்!.. விஜய பாஸ்கருக்கு நீதிமன்றம் நெருக்கடி..
டார்க்: 2ம் நாள் வசூல் நிலவரம்
திரையரங்குகளில் வெளியாகும் வித்தியாசமான பேய் மற்றும் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படங்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வரிசையில், எந்தவித ஆரவாரமும் இன்றி, முழுக்க முழுக்க கதையை மட்டுமே நம்பி கடந்த ஜூலை 3-ஆம் தேதி தியேட்டர்களில் வெளியான புதிய படம் தான் 'டார்க்' .
காளிதாஸ் 2 படத்தின் மூலம் கவனம் ஈர்த்த அஜய் கார்த்தி இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருடன் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் மறைந்த இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ், அஞ்சனா நேத்ரன், VTV கணேஷ் மற்றும் நட்டி (நட்ராஜ்) ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தை அறிமுக இயக்குநர் கல்யாண்.கே.ஜெகன் இயக்கியுள்ளார். மனு ரமேஷன் இசையமைப்பில் பாடல்களும், பின்னணி இசையும் த்ரில்லர் பாணிக்கு பலம் சேர்த்துள்ளன. 'டாடா' பட புகழ் இயக்குநர் கணேஷ் கே.பாபு, அஜய் கார்த்தியின் தந்தை 5 ஸ்டார் கே.செந்திலுடன் இணைந்து 'MG ஸ்டுடியோஸ்' நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளார்.
பெரிய எதிர்பார்ப்புகள் இன்றி வெளியான டார்க் திரைப்படம், தியேட்டருக்கு சென்ற ஹாரர் சினிமா ரசிகர்களுக்கு ஒரு நல்ல அனுபவத்தைக் கொடுத்துள்ளது. ஹாரர் த்ரில்லர் பிரியர்கள் தாராளமாக ஒருமுறை பார்க்கலாம் என பாசிட்டிவ் விமர்சனங்கள் பரவி வருகின்றன.
பாசிட்டிவ் விமர்சனங்களின் பலனாக, கடந்த 2 நாட்களில் மட்டும் உலக அளவில் சுமார் ரூ.40 லட்சம் வரை இப்படம் வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வரும் நாட்களில் இந்த வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
