1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. d55 om movie first look poster is out

D55: தனுஷ் - ராஜ்குமார் பெரியசாமி இணையும் ஓம்!.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் செம மாஸ்!...

om
சிவகார்த்திகேயனை வைத்து அமரன் திரைப்படத்தை இயக்கியவர் ராஜ்குமார் பெரியசாமி. படம் 300 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படத்தின் உருவாக்கத்தை திரையுலகில் பலரும் பாராட்டினார்கள்.

அமரன் படத்துக்கு பின் தனுசை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கிவருகிறார் ராஜ்குமார் பெரியசாமி. சுமார் 150 பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி வருவதாக சொல்லப்பட்டது. இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைப்பதாகவும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில்தான், இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை தற்போது படக்குழு வெளியிட்டிருக்கிறது. படத்திற்கு ஓம் என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. மேலும், Chapter 1 Udhiram The Blood wood என என கேப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கிறது.

om

ஒரு கையில் கத்தி, ஒரு கையில் துப்பாக்கி வைத்துக் கொண்டு மழையில் கோபத்துடன் தனுஷ் நடித்த நிற்க அவருக்கு பின்னால் ஏழை மக்களுக்கு கையெடுத்து கும்பிடுவது போல அந்த போஸ்டர் டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. மேலும், வருகிற அக்டோபர் 16ம் தேதி படம் ரிலீஸ் எனவும் போஸ்டரில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அடுத்த கட்டுரையில்
ஜீவா - எம். ராஜேஷ் கூட்டணியின் ஜாலியா இருந்த ஒருத்தன் : டீஸர் தேதி அறிவிப்பு