வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: வியாழன், 4 மே 2017 (18:11 IST)

கமல்ஹாசன் மீதான அவதூறு வழக்கு - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மகாபாரதம் குறித்து நடிகர் கமல்ஹாசன் இழிவாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.


 

 
சில நாட்களுக்கு முன்பு, தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கமல்ஹாசன், இந்துக்களின் புனித நூலான மகாபாரதத்தை அவமதித்து விட்டார் என ஆதிநாதர் சுந்தரம் என்பவர் வள்ளியூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மே 5ஆம் தேதி  (நாளை) கமல்ஹாசன் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார்.
 
இந்நிலையில், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கும்படி கேட்டு மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் கமல்ஹாசன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கும்படியும் குறிப்பிடப்பட்டிருந்தது. 
 
அந்த  மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது. இதில் தீர்ப்பளித்த நீதிபதி, இந்த வழக்கை விசாரிக்க வள்ளியூர் நீதிமன்றத்திற்கு இடைக்கால தடை விதித்ததோடு, இந்த வழக்கில் கமல்ஹாசன் நேரில் ஆஜராக தேவையில்லை என அதிரடி தீர்ப்பளித்துள்ளார்.