தொடர்புடைய செய்திகள்
- கூலி படத்தைத் திரையிட ஆர்வம் காட்டாத வட இந்திய மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள்… நேரடியாகக் களமிறங்கிய அமீர்கான்!
- பாடல்களை மெருகேற்ற chat GPT ஐப் பயன்படுத்துகிறாரா அனிருத்?... அவரே சொன்ன பதில்!
- தெலுங்குக்கு ராஜமௌலி… தமிழுக்கு லோகேஷ்…. ரஜினிகாந்த் பாராட்டு!
- ரஜினியின் ‘கூலி’ பேட்ஜ் நம்பர் 1421! இந்த நம்பருக்கு பின்னாடி இப்படி ஒரு கதையா? - சீக்ரெட்டை சொன்ன லோக்கி!
- எனக்கும் சத்யராஜூக்கும் முரண்பாடு இருப்பது உண்மைதான்: ‘கூலி’ விழாவில் ரஜினிகாந்த்
கூலி படம் 1000 கோடி ரூபாய் வசூலிக்காது… தயாரிப்பாளர் தனஞ்செயன் சொல்லும் காரணம்!
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக ரஜினிகாந்த்- லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ள கூலி படம் அமைந்துள்ளது. இந்த படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், அமீர்கான், உபேந்திரா மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் தற்போது ப்ரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே நேற்று இந்த படம் சென்சார் செய்யப்பட்டு A சான்றிதழ் பெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் இருந்து முதல்முறையாக 1000 கோடி ரூபாய் வசூலிக்கும் படமாக கூலி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
ஆனால் அதற்கான வாய்ப்புகள் குறைவு என தமிழ் சினிமா தயாரிப்பாளர் கோ தனஞ்செயன் கூறியுள்ளார். இது சம்மந்தமாகப் பேசியுள்ள அவர் “ஒரு படம் 1000 கோடி வசூலிக்க வட இந்தியாவில் மிகப்பெரிய அளவில் வசூலிக்கவேண்டும். கூலி படம் 650 கோடி ரூபாய் அளவுக்கு வசூலிக்கும். 1000 கோடி ரூபாய் வசூலுக்கான வாய்ப்பு மிகக் குறைவு” எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
