1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Controversy Surrounding "Thakkalai" Film: Suhasini’s Comment, Kamal’s Support, and Box Office Struggle

’தக்லைஃப்’ படத்தை எடுக்க வேண்டாம் என சுஹாசினி சொன்னாரா? பரபரப்பு தகவல்..!

’தக்லைஃப்’ மணிரத்தினம்
’தக்லைஃப்’ திரைப்படத்தின் கதை தொடர்பான விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, "இந்த படம் வேண்டாம், இந்த கதை தமிழ் ஆடியன்ஸுக்கு செட்டாகாது" என்று மணிரத்னம் மனைவி சுஹாசினி கூறியதாகவும், ஆனால் மணிரத்னம், கமல்ஹாசன் கொடுத்த நம்பிக்கையின் காரணமாகத்தான் இந்த படத்தை எடுத்ததாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
’தக்லைஃப்’ படத்தின் கதை என்பது கமல்ஹாசன் உடையது என்றும், அவர் கூறிய ஒரு கதையின் ஒரு சிறு பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு மணிரத்னம் இந்த படத்தின் திரைக்கதையை டெவலப் செய்தார் என்றும் கூறப்பட்டது.
 
இந்த நிலையில், முழுவதுமாக திரைக்கதை அமைத்து முடித்தவுடன் அதை படித்து பார்த்த சுஹாசினி "இந்த படம் வேண்டாம், இது நிச்சயம் தமிழ் ஆடியன்ஸுக்கு செட்டாகாது" என்று கூறியதாகவும்,  அதனால் குழப்பத்தில் இருந்த மணிரத்னம், கமல் கொடுத்த தைரியம் காரணத்தினால் இந்த படத்தை எடுத்ததாகவும், திரையுலக வட்டாரங்கள் கூறி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த நிலையில்,   ’தக்லைஃப்’ திரைப்படம் கடந்த ஐந்து நாட்களில் இந்தியா முழுவதும் வெறும் ரூ.40 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Edited by Mahendran
 
அடுத்த கட்டுரையில்
’தக்லைஃபில்’ விட்டதை ‘கூலி’யில் எடுக்கனும்.. ரிலீஸ் உரிமை பெற போட்டி போடும் விநியோகிஸ்தர்கள்..!