வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Updated : புதன், 28 அக்டோபர் 2015 (16:35 IST)

சிரிப்பு ரௌடி இப்போ விரைப்பு போலீஸ்

நானும் ரௌடிதான் படத்தில், ரௌடியாகும் முயற்சியில் இறங்கிய விஜய் சேதுபதி, தற்போது விரைப்பு போலீஸாக அவதாரம் எடுத்திருக்கிறார். இது, சேதுபதி படத்திற்காக.


 
 
நானும் ரௌடிதான் படத்துக்கு முன்பு விஜய் சேதுபதி நடித்த ஆறு படங்கள் தொடர்ச்சியாக தோல்வியடைந்தன. அந்த ஆறு தோல்விகளில் ஒன்றை மட்டும் விஜய் சேதுபதி தோல்வியாக கருதவில்லை. அது, பண்ணையாரும் பத்மினியும் படம். அது நல்ல படம் என்ற எண்ணம் அப்போதும், இப்போதும் விஜய் சேதுபதிக்கு உண்டு.
 
மேலும் அடுத்த பக்கம் பார்க்கவும்....

பண்ணையாரும் பத்மினியும் படத்தை இயக்கிய அருண் குமாருக்கு விஜய் சேதுபதி அன்றே கால்ஷீட் தருவதாக வாக்குறுதி தந்திருந்தார். அந்தப் படம்தான், சேதுபதி.


 
 
இதில் காக்க காக்க சூர்யா மாதிரி முறைப்பும், விரைப்புமான போலீஸ் வேடம் விஜய் சேதுபதிக்கு. பர்ஸ்ட் லுக் படங்களில், நானும் ரௌடியில் வந்த சிரிப்பு ரௌடியா என்று ஆச்சரியம் தோன்றும் அளவுக்கு போலீஸாகவே மாறியிருக்கிறார்.
 
கேரக்டராகவே மாறிவிடுவதால் நடிப்பு பச்சோந்தி எனலாமா விஜய் சேதுபதியை?