ஒளிப்பதிவாளர் செழியர் மரணம்!.. திரையுலகினர் அதிர்ச்சி..
ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் செழியன் உயிரிழந்த சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. கல்லூரி திரைப்படம் மூலம் ஒளிப்பதிவாளராக கோலிவுட்டில் அறிமுகமானவர் செழியன். அதன்பின் இரட்டை சுழி, மகிழ்ச்சி, தென்மேற்கு பருவக்காற்று, ஜோக்கர், கொன்றால் பாவம் ஆகிய படங்களுக்கு இவர் ஒளிப்பதிவு செய்துள்ளார். டூலெட் என்கிற திரைப்படத்தை இயக்கினார். சில முக்கிய குறும்படங்களையும் இவர் இயக்கியுள்ளார். இவர் இயக்கிய டூலெட் திரைப்படம் தேசிய விருதையும் பெற்றது..
இந்நிலையில்தான், திடீரென இவர் உயிரிழந்திருக்கிறார். அவரின் மரணத்திற்கான காரணம் இனிமேல்தான் தெரியவரும். இவரின் உடல் திரையுலகினரின் அஞ்சலிக்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான ராவணன் குடியிருப்பில் வைக்கப்பட்டுள்ளது. அவரின் மறைவுக்கு ரசிகர்களும், திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இயக்குனர் பாலா இயக்கிய பரதேசி, தாரை தப்பட்டை ஆகிய இரண்டு படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்திருந்தார். இதில் பரதேசி படத்திற்காக பல விருதுகளை இவர் பெற்றார்..
இயக்குனர் பாலா இயக்கிய பரதேசி, தாரை தப்பட்டை ஆகிய இரண்டு படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்திருந்தார். இதில் பரதேசி படத்திற்காக பல விருதுகளை இவர் பெற்றார்..
