செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : புதன், 2 மார்ச் 2016 (10:31 IST)

சென்னை பாக்ஸ் ஆபிஸ் - கணிதன் முதலிடம்

சென்னை பாக்ஸ் ஆபிஸ் - கணிதன் முதலிடம்

5. த ரெவனென்ட்
 
ஆஸ்கரில் முக்கிய மூன்று விருதுகள் பெற்ற இப்படம் சென்ற வெள்ளிக்கிழமை 
வெளியானது. முதல் மூன்று தினங்களில் இதன் சென்னை வசூல், 16.05 லட்சங்கள். 
 
4. ஆறாது சினம் 
 
அருள்நிதி நடித்த இந்த மலையாள தழுவல் படம் சென்ற வாரம் திரைக்கு வந்தது. முதல் 
மூன்று தினங்களில் இதன் வசூல், 34.06 லட்சங்கள். 


 
 
3. சேதுபதி 
 
விஜய் சேதுபதியின் சேதுபதி இந்த வாரமும் மிருதனுக்கு அடுத்த இடத்திலேயே 
உள்ளது. சென்ற வார இறுதியில் 36.50 லட்சங்களை வசூலித்த படம், கடந்த ஞாயிறுவரை 
1.62 கோடியை வசூலித்துள்ளது. 
 
2. மிருதன் 
 
ஜெயம் ரவியின் மிருதன் சென்ற வார இறுதியில் 41.90 லட்சங்களை வசூலித்துள்ளது. 
கடந்த ஞாயிறுவரை இதன் சென்னை வசூல் 2.31 கோடிகள். 
 
1. கணிதன் 
 
அதர்வா நடித்துள்ள கணிதன் சென்ற வாரம் வெளியானது. முதல் மூன்று தினங்களில் 
சென்னையில் 51.09 லட்சங்களை வசூலித்து முதலிடத்தைப் பிடித்துள்ளது.