1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. censor board given certificate to jananayagan movie

13 இடங்களில் கட்!.. ஜனநாயகனுக்கு சென்சார் சான்றிதழ் வந்தாச்சி!.. ரீலீஸ் தேதி இதுவா?..

jananayagan
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பு கடைசியாக நடித்த திரைப்படம் ஜனநாயகன். ஹெச்.வினோத் இந்த படத்தை இயக்கியிருந்தார். தெலுங்கில் பாலையா நடித்து வெளியான பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகியிருக்கிறது.

இந்த படத்தில் மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். விஜயின் கடைசி படம் என்பதால் இந்த படத்தை பார்க்க விஜய் ரசிகர்கள் ஆவலாக காத்திருந்தார்கள். ஆனால் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை. ஜனவரி 9ம்தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு 6 மாதங்களாகியும் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கொடுக்கப்படாமல் இருந்தது.

censor

இந்நிலையில்தான், ஒருவழியாக ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைத்திருக்கிறது. படத்திற்கு A சான்றிதழ் கொடுக்கப்பட்டிருக்கிறது. மூன்று மணி நேரம் நீளமுள்ள இந்த படத்திற்கு 13 இடங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது.
படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைத்து விட்டதால் வருகிற 23ஆம் தேதி ஜனநாயகன் திரைப்படம் உலகமெங்கும் வெளியாகும் என செய்திகள் உலா வருகிறது. விரைவில் கே.வி.என் நிறுவனம் ரிலீஸ் தேதியை அறிவிக்கும் என விஜய் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
அடுத்த கட்டுரையில்
அங்கதான் ஸ்டார்ட் ஆச்சி!.. முதல்வர் விஜய்க்கு இயக்குனர் விஜய் கொடுத்த பரிசு..