செவ்வாய், 17 பிப்ரவரி 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 12 ஜனவரி 2026 (17:00 IST)

விடாமல் விரட்டும் தணிக்கை வாரியம்!.. உச்சநீதிமன்றத்திலும் முடியாத பஞ்சாயத்து!...

jananayagan
விஜய் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பதை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ஜனநாயகன். விஜய் அரசியலுக்கு சென்றுவிட்டதால் இது அவரின் கடைசி படம் என விஜய் ரசிகர்கள் கருதுகிறார்கள். ஆனால் இந்த படம் சென்சார் பிரச்சினையில் சிக்கியது. படத்தை பார்த்துவிட்டு UA சான்றிதழ் கொடுப்பதாக சொன்ன சென்சார் அதிகாரிகள் சில நாட்கள் கழித்து மறுதணிக்கை செய்ய வேண்டும் என தெரிவித்துவிட்டார்கள். பட ரிலீஸ் நெருங்கிவிட்டதால் பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் இரு தரப்புவாதங்களையும் கேட்ட தனி நீதிபதி பிடி.ஆஷா படத்திற்கு உடனே சென்சார் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால் உடனடியாக சென்சார் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை வாங்கினார்கள்.

இந்த வழக்கு வருகிற 21-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் படக்குழு உச்ச நீதிமன்றத்தை நாடியிருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் பட நிறுவனத்திற்கு சாதகமாக தீர்ப்பு வந்து விட்டால் ஜனநாயகன் ரிலீஸாவதை யாராலும் தடுக்க முடியாது.

இந்நிலையில் தணிக்கை வாரியம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதாவது தங்களின் கருத்தை கேட்காமல் இந்த வழக்கில் தீர்ப்பு சொல்லக்கூடாது என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்திலும் ஜனநாயகனுக்கான சிக்கல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.