செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக்கில் இணையும் மாதவன், ஆர்யா, அமலாபால்


Sasikala| Last Modified புதன், 31 ஆகஸ்ட் 2016 (17:12 IST)
நட்சத்திர கிரிக்கெட் போட்டியைத் தொடர்ந்து தற்போது சென்னை, ஐதராபாத், கொச்சி, பெங்களூரு ஆகிய ஊர்களில் நட்சத்திர பேட்மிண்டன் போட்டி விரைவில் நடைபெறவிருக்கிறது.

 


இந்த போட்டிகள் ‘செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக்’ என்ற பெயரில் நடைபெறவிருக்கிறதுஇதில் மாதவன், ஆர்யா, அமாலாபால் ஆகிய மூன்று பேரும் ஒரே கூட்டணியில் இணைந்துள்ளனர். இறுதிப்போட்டி மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கிறது.
 
இதனை அடுத்து சென்னை அணி சார்பில் விளையாடும் வீரர்களின் அறிமுக விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த அணியில் நடிகர் ஆர்யா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து நடிகர் நடிகைகள் கலந்து கொள்கின்றனர். பரத், பிரசன்னா, அபிநய் வட்டி, அமிதாஷ், முன்னா, சாந்தனு, வைபவ், காயத்ரி, இனியா, ரூபா மஞ்சரி ஆகியோரும் விளையாடுகிறார்கள். 
 
இதில் விளையாடும் அணியின் விளம்பர தூதராக மாதவன் பொறுப்பேற்றுள்ளார். மேலும் அணியின் ஊக்குவிப்பாளராக அமலாபால் ஒப்பந்தமாகியுள்ளார். இவர்களை நடிகரும், நடிகர் சங்க தலைவருமான நாசர் அறிமுகம் செய்து வைத்தார்.


இதில் மேலும் படிக்கவும் :