வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 12 ஜூலை 2016 (10:53 IST)

பல்கேரியா - பொங்கல் - சாய் பல்லவி.. அஜித் பட அப்டேட்ஸ்

பல்கேரியா - பொங்கல் - சாய் பல்லவி.. அஜித் பட அப்டேட்ஸ்

சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் பூஜை சென்னையில் எளிமையாக நடந்தது. ஆடி மாதத்தில் படபூஜை போடுவதில்லை என்பதால் அவசரமாக பூஜை போட்டார்களே தவிர படப்பிடிப்புக்கு ஆகஸ்ட் மாதத்தில்தான் செல்கின்றனர்.


 
 
நமக்குக் கிடைத்த தகவலின்படி முதல்கட்ட படப்பிடிப்பை பல்கேரியாவில் தொடங்குகின்றனர். இந்தப் படம் முழுமையாக வெளிநாட்டில் தயாராகிறது என்று தயாரிப்பாளர் தியாகராஜன் கூறியிருந்ததை இங்கு நினைவுகூர்வது நலம். 
 
அனுஷ்கா, ரித்திகா சிங் இந்தப் படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால், காஜல் அகர்வாலை நாயகியாக ஒப்பந்தம் செய்திருப்பதாக சமீபத்திய தகவல்கள் கூறுகின்றன. சாய் பல்லவியிடம் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தயிருப்பதாகவும் படக்குழு கூறுகிறது.
 
காமெடிக்கு கருணாகரனை ஒப்பந்தம் செய்துள்ளனர். படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் பெயரை 2017 பொங்கலுக்கு அறிவிக்க திட்டமிட்டுள்ளனர். 2017 ஏப்ரல் 14 படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.