1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By K.N.Vadivel
Last Modified: வியாழன், 24 மார்ச் 2016 (02:30 IST)

சாதனை படைத்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன்

சாதனை படைத்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனை ட்விட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 2 கோடியாக உயர்ந்துள்ளது.
 

 
இது குறித்து, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப், தனது ட்விட்டர் பக்கத்தில், அனைவருக்கும் நன்றி. இரண்டு கோடியை தாண்டி. வரும் காலத்தில், அது 3 கோடியை நோக்கி செல்லும் என தனது மகிழ்ச்சியை பதிவு செய்துள்ளார்.
 
கடந்த 2010 ம் ஆண்டு டிவிட்டர் சமூக வலைதளத்தில் அமிதாப்பச்சன் இணைந்தார். ஆனால், தற்போதுவரை தனது தனது  அபிமானிகளின் மரியாதைக்குரியவராக இடம் பெற்றுவருகிறார்.
 
இந்திய அளவில், ட்விட்டரில் அமிதாப்பை அடுத்து 1.86 கோடி ஃ பாலோயர்ஸ் நடிகர் ஷாருக் கானுக்கு உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.