பிரபாஸுடன் நடிக்க மறுக்கும் முன்னணி நடிகைகள்


Abimukatheesh| Last Updated: திங்கள், 8 மே 2017 (17:09 IST)
பாகுபலி படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமடைந்த நடிகர் பிரபாஸ் உடன் இந்தி நடிகைகள் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

 

 
அண்மையில் வெளியான பாகுபலி 2 இந்திய சினிமா வரலாற்றில் ரூ.1000 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் பாகுபலி நாடு முழுவதும் பிரபலமடைந்துள்ளது. பாகுபலி முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
 
மேலும் பிரபாஸ் சிறந்த ஹீரோவாகவும் வலம் வருகிறார். பாகுபலி படத்தால் வேறு எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்த பிரபாஸ் தற்போது சாஹு என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி என மூன்று மொழிகளில் உருவாக உள்ளது. இந்த படத்தில் பாலிவுட் ஹீரோயின்களை நடிக்க வைக்க முடிவு செய்த படக்குழு கேத்ரினா, ப்ரணிதி சோப்ரா ஆகியோரிடம் கேட்டுள்ளனர்.
 
ஆனால் அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டனர். பாலிவுட்டில் கான் நடிகர்களுடன் நடித்து வரும் நடிகைகள் பிரபாஸ் உடன் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :